தொக்கா 2 போன்.. ரூ. 6000-ல ஒன்னு.. ரூ. 7000-ல ஒன்னு.. 2 கேமரா.. பெரிய டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
யாருயா சொன்னது, ரூ. 6000 விலையில் மற்றும் ரூ. 7000 விலையில் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க முடியாதென்று. பெரிய டிஸ்பிளே, இரண்டு கேமரா, தினசரி செயல்திறனை சமாளிக்கும் சக்தி வாய்ந்த சிப்செட், 5000mAh கேமரா என்று எல்லாமே அடங்கிய ஒரு ஸ்மார்ட்போனை இப்போது உங்களால் ரூ. 6000 மற்றும் ரூ. 7000 விலையில் வாங்க முடியும். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது ரியல்மி நிறுவனம் தான். ரியல்மி நிறுவனத்தின் எந்த மாடலை இப்போது நீங்கள் சலுகை விலையில் வாங்கலாம் என்பது இங்கே.
அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் அமேசான் தசரா ஸ்பெஷல் டே சேல் 2024 (Amazon Dussehra Special Days Sale 2024) சிறப்பு விற்பனையில் இப்போது ரியல்மி நிறுவனத்தின் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. இதில் ரியல்மி நர்ஸோ N61 (realme NARZO N61) மற்றும் ரியல்மி நர்ஸோ N63 (realme NARZO N63) அபாரமான சலுகையை வழங்கியுள்ளது.

தொக்கா 2 போன்.. ரூ. 6000-ல ஒன்னு.. ரூ. 7000-ல ஒன்னு.. எந்த மாடல்?
அதிக செலவின்றி தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியா இருக்கிறதென்றால், நீங்கள் இந்த ரியல்மி நர்ஸோ N61 (realme NARZO N61) மற்றும் ரியல்மி நர்ஸோ N63 (realme NARZO N63) போன்களை கருத்தில்கொள்ளலாம். இதில் ரியல்மி நர்ஸோ N61 (realme NARZO N61) மாடல் சிறப்பு பண்டிகை கால சலுகையுடன் வெறும் ரூ. 6,499 விலையில் வாங்க கிடைக்கிறது.
அதேபோல், ரியல்மி நர்ஸோ N63 (realme NARZO N63) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது சிறப்பு பண்டிகை கால சலுகையுடன் வெறும் ரூ. 7,199 விலையில் வாங்க கிடைக்கிறது.
ரியல்மி நர்ஸோ N61 சிறப்பம்சம் (realme NARZO N61 Specifications):
- 6.74 இன்ச் LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- Unisoc Tiger T612 சிப்செட்
- 4GB ரேம் / 6GB ரேம்
- 64GB / 128GB ஸ்டோரேஜ்
- 32MP டூயல் கேமரா
- 5MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
ரியல்மி நர்ஸோ N63 சிறப்பம்சம் (realme NARZO N63 Specifications):
- 6.74 இன்ச் LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- Unisoc Tiger T612 சிப்செட்
- 4GB ரேம் / 6GB ரேம்
- 64GB / 128GB ஸ்டோரேஜ்
- 50MP டூயல் கேமரா
- 8MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
-45W பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி நர்ஸோ N61 (realme NARZO N61) சாதனத்தின் அசல் விலை ரூ. 8999 என்றாலும், இப்போது இது அமேசான் தளத்தில் ரூ. 7,498 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்துடன் ரூ. 1000 மதிப்பிலான கூப்பனை கிளிக் செய்ய மறந்துவிடாதீர்கள். ரியல்மி நர்ஸோ N63 (realme NARZO N63) அசல் விலை ரூ.9,999 ஆகும். இது தற்போது அமேசான் தளத்தில் ரூ. 7,199 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








