விஸ்வரூப விற்பனை.. வெறும் ரூ.9,999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் 12ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 64எம்பி கேமரா, 33W சார்ஜ், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55) போன் ரூ.9,999 பட்ஜெட்டுக்கு கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ என்55 அம்சங்கள் (Realme Narzo N55 Specifications): இந்த ரியல்மி போன் கிளாஸ் பேக் பேனல் டிசைனில் பக்கா பிரீமியம் லுக் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளே ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) மாடலாகும்.

இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ போனில் 6 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த ரியல்மி மாடலில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் (LED Flash)கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஏஐ (AI) கேமராவாகும். அதே போல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack)மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.
இந்த ரியல்மி நார்சோ என்55 போனில் 33W சூப்பர்வூர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 29 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுவொரு 4ஜி போனென்பதால் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது.

அதேபோல வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போன் 189.5 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் ப்ரிசம் டிசைனில் (Ultra Slim Prism Design) பிரைம் பிளாக் (Prime Black) மற்றும் பிரைம் ப்ளூ (Prime Blue) ஆகிய 2 கலர் கொண்டிருக்கிறது.
இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 10,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. கம்மியான விலையில் பக்கா அம்சங்கள் வருவதால் விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த விற்பனையை மேலும் அதிகமாக்க இந்த போனின் 6 ரேம் மாடலின் விலை ரூ.10,999ஆக குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையில் அமேசான் தளத்தில் ரூ.1000 மதிப்பில் கூப்பன் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ.10,300 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
ஆகவே, ரியல்மி நார்சோ என்55 போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மிகவும் மலிவான விலையில் 12 ஜிபி ரேம், 64 ஜிபி கேமரா, சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற நல்ல அம்சங்கள் வேண்டுமானால், இந்த போனை ஆப்ஷனில் எடுத்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








