விஸ்வரூப விற்பனை.. ரூ.9,999 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. அமேசானில் குவியுது ஆர்டர்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களையும் அறக்க பறக்க செய்யும் வகையில், 16 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) போன் வெறும் ரூ.9,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ரியல்மி நார்சோ என்53 மாடலானது, 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

இந்த போனில் ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது. மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்டுள்ளது.
இந்த ரியல்மி நார்சோ மாடலில் 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) வருகிறது. ஆகவே, 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஏஐ கேமராவாகும். இதில் நைட் மோட் (Night Mode), சீக்ரெட் கார்டன் பில்டர் (Secret Garden Filter) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.
இந்த ரியல்மி போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இதற்கு டைப் சி சார்ஜிங் வருகிறது. இந்த மாடலில் ப்ளூடூத் 5.0, வை-பை 802, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இதுவொரு பட்ஜெட் போன் என்பதால், சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 3.5மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. மேலும், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொண்டிருக்கிறது. இந்த போன் மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
அப்போது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் மட்டும் விற்பனைக்கு கிடைத்தன. அதோடு 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டது. மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்றதால், அக்டோபர் 23ஆம் தேதி இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த மாடல், இன்று (அக்டோபர் 26) முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.10,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.9,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

அதேபோல இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,499ஆகவும் அமேசானில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகின்றன. கம்மியான பட்ஜெட்டில் பக்காவான அம்சங்கள் கொண்ட போன் வேண்டுமானால், இந்த நார்சோ மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








