மிரண்டு போவீங்க.. வெறும் ரூ.9,999 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டையே தூக்கி சாப்பிடும் விதமாக வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 33W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரியல்மி நார்சோ என்53 போனின் புது வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) போனானது, இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சொல்லப்போனால், ரூ.10,000க்கும் கம்மியான பட்ஜெட்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட போன் என்ற பெருமையையும் இந்த போன் பெற்றிருந்தது.
இப்போது, இந்த போனின் புதிய 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம்.
ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மி நார்சோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்தது. இப்போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகமாகியிருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் Side Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. இந்த போன் பிரம்மாண்ட பேட்டரி செட்டப் கொண்டிருக்கிறது. ஆகவே, 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு டைப் சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிவை வருகின்றன. இந்த நார்சோ மாடலில் ஃபெதர் கோல்டு (Feather Gold) மற்றும் ஃபெதர் பிளாக் (Feather Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதேபோல, இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வேரியண்ட் வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு அறிமுக சலுகையாக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்துகொள்ள முடியும். இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருப்பதால், மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








