Home
Mobile

தீர தீர விற்பனை.. ரூ.8,559 விலைக்கு 8GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) விற்பனையை முன்னிட்டு ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை விவரங்கள் இதோ.

ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மி நார்சோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.8,559 விலைக்கு 8GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி!

இந்த ரியல்மி நார்சோ மாடலில் 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் உள்ளது. அதோடு 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ சப்போர்ட், சீக்ரெட் கார்டன் பில்டர் (Secret Garden Filter) மற்றும் நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த நார்சோ போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்கள் கிடைக்கின்றன. இதன் 4 ஜிபி மாடலில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.

இந்த விலையில் வியக்க வைக்கும்படி 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத் 5.0, வை-பை 802, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் வருகிறது

இந்த ரியல்மி நார்சோ மாடலில் ஃபெதர் கோல்டு (Feather Gold) மற்றும் ஃபெதர் பிளாக் (Feather Black) ஆகிய 2 கலர்கள் கிடைக்கின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்து வெறும் மூன்று மாதங்களில் ரூ.10000 பட்ஜெட்டில் வெளியான போன்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாடல் என்ற பெயரை பெற்றது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு மிரட்டலான டிஸ்கவுண்ட்டுடன் மீண்டும் விற்பனையில் பின்னிப்பெடல் எடுக்கிறது.

இந்த போனின் 4 ஜிபி மாடலுக்கு ரூ.952 தள்ளுபடியும், 6 ஜிபி மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை கோடாக் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.8,559க்கு வாங்கிக் கொள்ளலாம்.

அதே போல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.10,380க்கு பெற்றுக் கொள்ளலாம். மிகவும் மலிவான விலையில், பீரிமியம் டிசைன், நல்ல கேமரா, பேட்டரி பேக்கப், விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வேண்டுமானால், இந்த போனை தேர்வு செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo N53 Under Rs 10000 With Offer in Flipkart Big Billion Day Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X