அடிச்சு தூக்கும் ஆர்டர்.. வெறும் ரூ.9499 போதும்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக அமேசானில் (Amazon) பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனை (Realme Valentines Day Sale) நடக்கிறது. ரியல்மி நார்சோ சீரிஸ் போன்கள் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன.
ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மியில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் கொண்டுள்ளது.

மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), சீக்ரெட் கார்டன் பில்டர் (Secret Garden Filter) போன்ற ரியல்மியின் பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மி நார்சோ போனில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் அல்ட்ராபூம் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது.
இப்போது, ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனையை முன்னிட்டு, 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும், 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.2500 தள்ளுபடியும் வழங்கப்பட இருக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி நார்சோ என்53 போனின் 8 ஜிபி ரேம் போனை வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ என்55 அம்சங்கள் (Realme Narzo N55 Specifications): இந்த நார்சோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போனிலும் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
இந்த ரியல்மி நார்சோ என்55 போனில் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 33W சூப்பர்வூர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொண்டுள்ளது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனையில் ரூ.4000 தள்ளுபடியோடு விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி நார்சோ என்55 போனை வெறும் ரூ.8,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








