அசூர விற்பனை.. வெறும் ரூ.8,999 விலை.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் ரூ.10,000 க்கும் கம்மியான பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியாகிய ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மி போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரியல்மி நார்சோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 4 ஜிபி மாடலில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுல் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 5 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமரா ஏஐ சப்போர்ட் கொண்டது. இதில் சீக்ரெட் கார்டன் பில்டர் (Secret Garden Filter), நைட் மோட் (Night Mode) போன்ற பிரத்யேக அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Fast Side Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் அல்ட்ராபூம் ஸ்பீக்கர் (Bottom Ported UltraBoom Speaker) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் வருகிறது.
மேலும், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி (Type-C) சார்ஜிங் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ரியல்மி நார்சோ என்53 போன் ஃபெதர் கோல்டு (Feather Gold) மற்றும் ஃபெதர் பிளாக் (Feather Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
அப்போது, ரூ.1000க்கும் மேல் அறிமுக சலுகை கிடைத்ததால் விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த சூழலில், நேற்று (செப்டம்பர் 6) ரியல்மி நிறுவனம், இந்தியாவில் ரூ.10,000க்கும் கம்மியான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போன்களில், இந்த நார்சோ என்53 மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications