புது 5G போன் வாங்கலையோ.. 10001mAh பேட்டரி முதல் ரூ.8000 பட்ஜெட் வரை.. தள்ளுபடி விலையில் 6 Realme போன்கள்!
ரூ.10000 க்குள் ரூ.20000 க்குள் அல்லது ரூ.30000 க்குள் - புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற பிளான் இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி வரை நடக்கும் நார்சோ டேஸ் சிறப்பு விற்பனையை நீங்கள் மிஸ் பண்ணவே கூடாது. தற்போது இது அமேசான் வலைத்தளத்தில் நேரலையில் உள்ளது. மொத்தம் 5 நார்சோ சீரீஸ் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
எந்தெந்த மாடல்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது?
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ரூ.14,249 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.
10,001எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ பவர் 5ஜி (Realme Narzo Power 5G) ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது
ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 5G)Pro ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) உடன் வருகிறது மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது ஒரு செவ்வக வடிவிலான ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32-மெகாபிக்சல் GC32E2 ப்ரைமரி சென்சார் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஒரு டேப்லெட் வடிவ எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் உள்ளது. இதன் கேமரா ஆப்பில் ஏஐ-பேக் இமேஜிங் மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) போன்ற எடிட்டிங் அம்சங்களும் உள்ளன.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 15W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் 5ஜி சிம் இணைப்பை ஆதரிக்கிறது.
மேலும் இது தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும், இராணுவ தர MIL-STD-810H அதிர்ச்சி எதிர்ப்பு சான்றிதழையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 7.94 மிமீ தடிமனும் மற்றும் 197 கிராம் எடையும் கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 கொண்டு இயங்குகிறது. இது 6.57-இன்ச் AMOLED FHD+ (1080 x 2372 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இதன் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 1400 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 1.07 பில்லியன் வண்ணங்கள் மற்றும் 100 சதவீதம் sRGB-ஐயும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Octacore 6nm MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz பீக் க்ளாக்டு ஸ்பீடை வழங்குகிறது. இது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடல் ஆனது 50-மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி ரியர் கேமராவை பெறுகிறது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பால் 30fps இல் 1080p ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh டைட்டன் பேட்டரிகளை கொண்டுள்ளது. மேலும் இது IP65 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ப்ளூடூத் 5.3, டூயல்-பேண்ட் வைஃபை, பீடோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ மற்றும் க்யூஇசட்எஸ்எஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications