Home
Mobile

பிப்.14-ல் களமிறங்கும் Realme புதிய வேரியண்ட்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வேலன்டைன்ஸ் ஸ்பெஷல் மெரூன் (Valentine's Special Maroon) நிறத்தில் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மாடலின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (வேலன்டைன்ஸ் ஸ்பெஷல் மெரூன்) மாடல் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு வரும். மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,499 விலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக பிப்ரவரி 14-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும்.

பிப்.14-ல் களமிறங்கும் Realme புதிய வேரியண்ட்.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90X 5G Specifications): ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி 2 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பிப்.14-ல் களமிறங்கும் Realme புதிய வேரியண்ட்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் இந்த போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன்.

குறிப்பாக 7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் ஆகும்.

photo credits: tudocelular

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 90X Valentines Special Maroon 5G price revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X