அடிச்சான் பாரு மட்ட ரேட்ல.. ரூ.14,999 க்கு 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 12GB ரேம்.. புதிய Realme 5G மாடல்!
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90X 5G) ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கிறது. ஏற்கனவே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா போன்ற பீச்சர்கள் வெளியாகின. இப்போது, விலை விவரங்கள் வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டு இருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 90 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இப்போது, ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களுடன் விலை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கின்றன.

ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. அதேபோல ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கின்றன. ஒவ்வொரு மாடல்களிலும் 2 கலர்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.17,999 பட்ஜெட்டில் இருக்கப் போகிறது. ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999 பட்ஜெட்டில் இருக்கப் போகிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக நார்சோ 90எக்ஸ் 5ஜி இருக்கப் போகிறது.
மேலும், நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனில் விக்டரி கோல்டு (Victory Gold) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) ஆகிய கலர்கள் வர இருக்கின்றன. அதேபோல ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபிளாஷ் ப்ளூ (Flash Blue) மற்றும் நைட்ரோ ப்ளூ (Nitro Blue) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த விலை மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவை.
முன்னதாக அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா தளத்தில் பேட்டரி, கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. இதில் 2 மாடல்களிலும் ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருப்பது உறுதியாகியது. முதலில் ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 90 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90 5G Specifications): 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளது.
ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90X 5G Specifications): சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே உள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி உள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே உள்ளது. ஏஐ ஏரைசர், ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








