Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.11,283 போதும்.. 7000mAh பேட்டரி.. 60W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் 7000mAh பேட்டரி மாடலான ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) ஸ்மார்ட்போனானது நம்ப முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த பேட்டரி மட்டுமல்லாமல், 60W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,948 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.2,365 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,283 விலைக்கு இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலை வாங்கலாம்.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.11,283 போதும்.. 7000mAh பேட்டரி.. மாடல்?

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) கொடுத்துள்ளது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஏஐ எடிட் ஜீனீ (AI Edit Genie), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ எரைஸ் (AI Eraser) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) வருகிறது.

6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிடி ஸ்டார் டிபிளஸ் கிளாஸ் (DT Star D+ Glass) புரொடெக்சனை கொடுத்து உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு உள்ளது. 1080p ரெக்கார்டிங் மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual view Video) கொடுக்கப்பட்டு உள்ளது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), மூவி மோட் (Movie Mode) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்து உள்ளது.

செல்பீ, வீடியோ கால்களுக்காக 1080p ரெசொலூஷன் ரெக்கார்டிங் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டையை கொண்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.28 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொண்டுள்ளது. IP65 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

மேலும், MIL-STD 810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்துள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுத்து உள்ளது. பிளாஷ் ப்ளூ (Flash Blue) மற்றும் நைட்ரோ ப்ளூ (Nitro Blue) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 90x 5G With 6GB RAM is Available At 17 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X