அறிமுகமானது புதிய வேரியண்ட்.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) ஸ்மார்ட்போன் ஏற்கனவே நைட்ரோ ப்ளூ மற்றும் ஃப்ளாஷ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வேலன்டைன்ஸ் ஸ்பெஷல் மெரூன் (Valentine's Special Maroon) நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வேலன்டைன்ஸ் ஸ்பெஷல் மெரூன் கலர் கொண்ட ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அமேசான் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த புதிய வேரியண்ட் விலையை ரியல்மி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இப்போது ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90X 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி 2 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.
அதுவும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்த போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன்.
மேலும் 7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








