SALE ஸ்டார்ட்.. Realme புது 5ஜி போன்.. ரூ.11,999 க்கு 7000mAh டைட்டன் பேட்டரி, 60W சார்ஜிங், IP65 ரேட்டிங்!
ரியல்மி (Realme) நிறுவனமானது கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அதன் ரியல்மி நார்சோ 90 சீரீஸ் (Realme Narzo 90 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த சீரிஸின் கீழ் 2 பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகின.
அவைகள் - ரியல்மி நார்சோ 90 5ஜி (Realme Narzo 90 5G) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) மாடல்கள் ஆகும். இதில் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (அதாவது டிசம்பர் 23 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி விலை, விற்பனை மற்றும் சலுகை: இந்தியாவில் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக நைட்ரோ ப்ளூ (Nitro Blue) மற்றும் பிளாஷ் ப்ளூ (Flash Blue) ஆகிய 2 கலர்களில், இன்று (டிசம்பர் 23) மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்
அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்கும் வாடிக்கையாளர்கக்கு ரூ.2,000 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன் (Discount Coupon) கிடைக்கும். மேலும் ரியல்மி இந்தியா வலைத்தளத்தில் ரூ.2,000 மதிப்புள்ள வங்கி சலுகைகளையும் (Bank Offers) தேர்வு செய்யலாம்.
மேற்கண்ட சலுகைகள் ஆனது பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.13,999 இல் இருந்து ரூ.11,999 ஆக குறைக்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.15,499 இல் இருந்து ரூ.13,499 ஆக குறைக்கும். இந்த விலைகள் விற்பனை தொடங்கிய முதல் 12 மணி நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்? டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 கொண்டு இயங்குகிறது. இது 6.57-இன்ச் AMOLED FHD+ (1080 x 2372 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இதன் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 1400 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 1.07 பில்லியன் வண்ணங்கள் மற்றும் 100 சதவீதம் sRGB-ஐயும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Octacore 6nm MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz பீக் க்ளாக்டு ஸ்பீடை வழங்குகிறது. இது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடல் ஆனது 50-மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி ரியர் கேமராவை பெறுகிறது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பால் 30fps இல் 1080p ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh டைட்டன் பேட்டரிகளை கொண்டுள்ளது. மேலும் இது IP65 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ப்ளூடூத் 5.3, டூயல்-பேண்ட் வைஃபை, பீடோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ மற்றும் க்யூஇசட்எஸ்எஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








