Realme டாப் கியர்.. மீண்டும் மீண்டுமா.. பட்ஜெட் விலையில் இன்னும் 2 புது 5G போன்கள்.. எந்த மாடல்கள்?
ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) மாடலின் விற்பனையே இன்னும் ஆரம்பிக்கவில்லை; டிசம்பர் 10 தான் ஆரம்பிக்கிறது. அதற்குள் ரியல்மி நிறுவனம் மேலும் 2 புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி நார்சோ 90 சீரீஸ் 5ஜி (Realme Narzo 90 Series 5G) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இது - கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 80 சீரீஸ் 5ஜி (Realme Narzo 80 Series 5G) ஸ்மார்ட்போன்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாக இருக்கும்.

புதிய ரியல்மி நார்சோ 90 சீரீஸ் 5ஜி சீரிஸின் கீழ் (முதலில்) ரியல்மி நார்சோ 90 ப்ரோ 5ஜி (Realme Narzo 90 Pro 5G) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (பின்னர் இன்னும் சில மாடல்கள் சேர்க்கப்படலாம்)
இந்த ஸ்மார்ட்போன்களுக்காக அமேசான் இந்தியா வலைத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோசைட் ஆனது - காமிக் பாணி டீஸர் தனித்துவமான கேமரா செட்டப்களுடன் இரண்டு ஸ்மார்ட்போன்களை காட்டுகிறது. அதாவது வரவிருக்கும் இரண்டு மாடல்களும் வெவ்வேறு மாதிரியான வடிவமைப்பை கொண்டிருக்கும், தனித்தனி மாடல்களாக இருக்கும்.
இவ்விரு போன்களில் ஒன்று - ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் கேமரா அமைப்பை போன்ற ஒரு டெகோவை கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி உடன் ஒத்துப்போகிறது. எனவே, இது ரியல்மி நார்சோ 90 ப்ரோ 5ஜி ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆனது செங்குத்தாக சீரமைக்கப்பட்ட லென்ஸ்கள் கொண்ட செவ்வக வடிவ கேமரா டெகோவை கொண்டுள்ளது. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இதேபோன்ற ரியர் டிசைனை தான் கொண்டுள்ளது. ஆக இது ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடல் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இதுதவிர்த்து மற்ற எல்லா அம்சங்களும் இப்போதைக்கு மறைக்கப்பட்டுள்ளன. நாளை, அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 90 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடும் என்று அமேசான் இந்தியா குறிப்பிடுகிறது; அதாவது ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்பு!
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இருப்பினும் அறிமுக சலுகையாக, ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேசிக் ஆப்ஷன் ரூ.13,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று ரியல்மி அறிவித்துள்ளது. இது மேட் சில்வர், எலிகண்ட் பிங்க் மற்றும் லேக் கிரீன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த போனின் விற்பனை வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக தொடங்கும்.


Click it and Unblock the Notifications








