அட்ரா சக்கை.. விலை இவ்ளோ கம்மி-ஆ.. 7000mAh பேட்டரி உடன் புதிய Realme 5ஜி போன்.. விற்பனை ஆரம்பம்!
ரியல்மி (Realme) நிறுவனமானது கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் 2 புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரண்டுமே ரியல்மி நார்சோ 90 சீரீஸின் (Realme Narzo 90 Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த ரியல்மி நார்சோ 90 சீரீசின் கீழ் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 90 5ஜி (Realme Narzo 90 5G) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலின் விற்பனை நேற்று (டிசம்பர் 23) முதல் தொடங்கியது. இன்று (டிசம்பர் 24) தொடங்குகிறது.

என்ன விலை? ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான டாப்-எண்ட் ஆப்ஷன் ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 90 5ஜி சீரீஸின் விரிவான அம்சங்கள்: இரண்டுமே டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வருகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 கொண்டு இயங்குகின்றன. ஸ்டாண்டர்ட் மாடலில் 6.57-இன்ச் AMOLED FHD+ (1080 x 2372 பிக்சல்ஸ்) டிஸ்பிளே உள்ளது.
இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 1400 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 1.07 பில்லியன் வண்ணங்கள் மற்றும் 100 சதவீதம் sRGB-ஐயும் ஆதரிக்கிறது.
மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று பெரிய 6.80-இன்ச் (720 x 1570 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை (144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் 83 சதவீதம் DCI-P3 கலர் கேமட்) கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் Octacore 6nm MediaTek Dimensity 6400 Max சிப்செட் கொண்டு இயங்குகிறது. இது Mali G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Octacore 6nm MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz பீக் க்ளாக்டு ஸ்பீடை வழங்குகிறது; ஸ்டாண்டர்ட் மாடலின் அதே GPU, RAM மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. அதில் 50-மெகாபிக்சல் (f/1.8) பிரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் சென்சார் உள்ளது. இருப்பினும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடல் ஆனது 50-மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி ரியர் கேமராவை பெறுகிறது.
ஸ்டாண்டர்ட் மாடலில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மாடலில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக ரியல்மி நார்சோ 90 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே 30fps இல் 1080p ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை 2 ரியல்மி நார்சோ 90 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh டைட்டன் பேட்டரிகளை கொண்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மாடல் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 மதிப்பீடுகளுடன் அனுப்பப்படுவதாகவும், 90எக்ஸ் 5ஜி மாடல் ஆனது IP65 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் அனுப்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








