Home
Mobile

போட்டான் பாரு போடு.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 50MP கேமரா.. பட்ஜெட் ரேட்டில் புது Realme 5ஜி போன்!

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடல்களாக ரியல்மி நார்சோ 90 5ஜி (Realme Narzo 90 5G) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90X 5G) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இப்போது, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா போன்ற முக்கிய பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ரியல்மி நார்சோ மாடல்களின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி இந்த ரியல்மி நார்சோ 90 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ரியல்மி இந்தியா மற்றும் அமேசான் தளங்களில் மைக்ரோசைட் வழியாக முக்கிய பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தட்டித் தூக்கும்படி இருக்கிறது.

போட்டான் பாரு போடு.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 50MP கேமரா!

ரியல்மி நார்சோ 90 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90 5G Specifications): இந்த நார்சோ போனில் 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது.

பெரிய பேட்டரி கிடைப்பதால், 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கேரண்டி கிடைக்கிறது. இதுபோக ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) மற்றும் ஏஐ எடிட்டர் (AI Editor) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser) கிடைக்கிறது.

இதுபோக ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) சப்போர்ட் கிடைக்கிறது. ஒயிட் மற்றும் கிரே ஷேட்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதைவிட கம்மியான பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அறிமுகமாக இருக்கிறது.

போட்டான் பாரு போடு.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. 50MP கேமரா!

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90X 5G Specifications): இந்த நார்சோ ஸ்மார்ட்போனிலும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. அதேபோல 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. 50 எம்பி மெயின் கேமரா சோனி சென்சாருடன் கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 400 சதவீத வால்யூம் பூஸ்ட் கொடுக்கும்படி ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. முந்தைய மாடலை போலவே ஏஐ எடிட் ஜீனி, ஏஐ ஏரைசர் மற்றும் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி போன்ற பீச்சர்களை இந்த நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

இந்த மாடல்களின் பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களை வைத்து பட்ஜெட்டை பார்க்க முடிகிறது. அதாவது, இந்தியாவில் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80X 5G) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,999ஆக இருக்கிறது. ஆகவே, ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நிச்சயம் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

அதேபோல ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டுக்கும கம்மியான விலைக்கே மார்கெட்டில் வெளியாகும். ஆகவே, மலிவான பட்ஜெட்டாக இருப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட வாய்ப்புள்ளது. ஏனென்றால், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 90 5G Narzo 90X 5G With 7000mAh Battery Confirmed Ahead of December 16 Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X