மார்கெட் அதிருது.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன்ட், டைமன்சிட்டி 6400 5ஜி சிப்செட், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட், 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) போன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனுக்கு கிடைக்கும் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி விலை (Realme Narzo 80x 5G Price): இந்த ரியல்மி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,750 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.250 பேங்க் ஆஃபர் போக அமேசான் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 11ஆம் தேதி லிமிடெட் பிரீயட் சேல் தொடங்குகிறது. வெறும் 7.94 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் மட்டுமல்லாமல் பிரீமியம் ஃபீல் கொடுக்கும்படி டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80x 5G Specifications): இந்த நார்சோ மாடலில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OMNIVISION OV50D) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. ஏஐ கிளியர் பேஸ், மல்டி வீடியோ, அண்டர் வாட்டர், டில்ட் ஷிப்ட் போன்ற பீச்சர்களை இந்த கேமரா கொடுக்கிறது.
IP69 ரேட்டிங் வாட்டர் ப்ரூப், ஃபோம் சீல் புரொடெக்சன், லிக்விட் சிலிகான் புரொடெக்சன், மிலிட்டரி கிரேடு ஷார் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டிஸ்பிளேவுக்கு ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி57 ஜிபியு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப் உள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட சூப்பர் வால்யூம் மோட் (Super Volume Mode) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுப்பதால் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications