Home
Mobile

அமேசான் மிரளுது.. ரூ.13,498 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) போனின் வெளியீட்டை முன்னிட்டு 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme NARZO 80x 5G) போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. பட்ஜெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த விலை குறைப்பு பக்கா நேரமாகும். இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.

ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி புது விலை (Realme NARZO 80x 5G New Price): இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,001 விலை குறைப்பு போக ரூ.13,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அமேசான் மிரளுது.. ரூ.13,498 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

ஆகவே, எந்தவொரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் இல்லாமலேயே ரூ.1,500 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ரூ.13,999 மார்கெட் விலை கொண்ட 6 ஜிபி ரேம் + 128 மெமரி மாடலானது, இப்போது ரூ.12,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, 2 மாடல்களுக்கும் ரூ.1,000 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80x 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (6nm Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட் கிடைக்கிறது.

அமேசான் மிரளுது.. ரூ.13,498 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

பில்ட்-குவாலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Shock Resistance) மற்றும் IP69 ரேட்டிங் டாப்-டயல் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது.

இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் பஞ்ச்-ஹோல் டிசைன் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

குவாலிட்டிக்கு அடுத்து பட்டையை கிளப்பும் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டிலும் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. பெரிய பேட்டரி கொடுத்தும் 7.94 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. MIL-STD 810H சர்டிபிகேஷன் மற்றும் IP68 ரேட்டிங் கூடுதலாக கிடைக்கிறது.

டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, வெளியாகி இருக்கும் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போனை பொறுத்தவரையில், 6000mAh பேட்டரி, 15W சார்ஜிங் மற்றும் 4 ஜிபி ரேம் பீச்சர்களுடன் ரூ.9,999 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. அதேபோல டைமன்சிட்டி 6300 சிப்செட் மட்டுமே கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80x 5G With 8GB RAM Gets Price Drop Now Available Under Rs 14000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X