Home
Mobile

அமேசான் அதிரும்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. Realme 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme NARZO 80x 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிரும்.. Realme 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80x 5G Specifications): ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போன் 6.72 இன்ச் புல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் இதன் டிஸ்பிளேவில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2400 x 1080 பிக்சல்கள், 240Hz டச் சாம்பிளிங ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (6nm Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரியல்மி போனில் உள்ளது.

ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா +2 எம்பி போர்ட்ராய்டு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அமேசான் அதிரும்.. Realme 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Shock Resistance) மற்றும் IP69 ரேட்டிங் டாப்-டயல் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர MIL-STD 810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி போன்.

6000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும் டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme Narzo 80x 5G with 6GB RAM price Drop on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X