அமேசான் மிரளுது.. வெறும் ரூ.12,999 பட்ஜெட்ல 18GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களையும் மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) போனின் விற்பனையானது அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கிவிட்டது. அடிமட்ட பட்ஜெட்டில் டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், 18 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இப்போது, பேங்க் கார்டுகள் இல்லாமலேயே நேரடியாக கூப்பன் டிஸ்கவுண்ட் போக மேலும் மலிவான வாங்க விலைக்கு கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80x 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஓசி (Octa Core 6nm MediaTek Dimensity 6400 SoC) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 10 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆப்ஷனில் வாங்கலாம். ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சப்போர்ட் உள்ளது. மலிவான விலைக்கு கிடைப்பதால், மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி கொடுக்கிறது.
6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) மற்றும் ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. மீடியம் அவுட்டோர் அவுட்புட் கொடுக்கும்படி 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OMNIVISION OV50D) சென்சார் கிடைக்கிறது. ஆனால், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடையாது. அதேபோல 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது.
பேட்டரி சிஸ்டம் ஹைலைட் பீச்சராக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரியை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. அதேபோல IP69 ரேட்டிங் & IP68 ரேட்டிங்குடன் டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military-Grade Shock Resistance) கொடுக்கிறது.
ஸ்பீடு வேவ் டிசைனில் டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆக இருக்கிறது.
இதில் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் மாடலுக்கும் ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் (Amazon) மற்றும் ரியல்மி (Realme) தளங்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








