ஏப்ரல் 11 காலி.. ரூ.13,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் வட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போனின் பட்ஜெட் செக்மெண்ட், முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே உறுதியாகிவிட்டன. இப்போது, லிமிடெட் பிரீயட் விற்பனை எந்த தேதியில் நடக்க இருக்கிறது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 80 சீரிஸ் (Realme Narzo 80 Series) ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப அதிக பேட்டரி பேக்கப் கொண்ட மாடல்களாக இவை வெளியாக இருக்கின்றன. இதில் ரூ.13,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் களமிறங்க இருக்கும் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது.
ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் பேட்டரி பீச்சர்கள் மட்டுமல்லாமல், எதிர்பார்க்க முடியாதபடி IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் ப்ரூஃப் (Military Grade Shockproof) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80x 5G Specifications): இந்த நார்சோ போனில் 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிளாட் டிசைன் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6400 SoC) சிப்செட் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) பேக் செய்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனில் கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 6,000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் வெறும் 7.94 தடிமன் மட்டுமே கொண்டு அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது.
அதேபோல 197 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) சப்போர்ட் கிடைக்கிறது. ரூ.13,000 பட்ஜெட்டில் IP68 ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். ஆனால், இதில் அதைவிட கூடுதலாக IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. இதுபோக ஷாக் ப்ரூஃப் கிடைக்கிறது.
ஆகவே, குவாலிட்டியில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான அவுட்புட் கிடைக்கிறது. ஏஐ ஸ்மார்ட் சிக்னல் அட்ஜெஸ்ட்மெண்ட் (AI Smart Signal Adjustment) மற்றும் ப்ரீ காலிங் (Free Calls) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. அதாவது கேமிங் கனெக்விட்டியை பூஸ்ட் செய்ய ஏஐ ஸ்மார்ட் சிக்னல் அட்ஜெஸ்ட்மெண்ட் மற்றும் ப்ளூடூத் மூலம் கால் செய்யும்படி ப்ரீ காலிங் கிடைக்கிறது.

மேற்கண்ட் பீச்சர்களுடன் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரியல்மி மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த விவரங்கள் நேற்று வரையில் வெளியாகின. இப்போது, லிமிடெட் பிரீயட் சேலின் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஏப்ரல் 11ஆம் தேதி லிமிடெட் பிரீயட் சேல் தொடங்குகிறது.
ஓப்பன் சேலுக்கு முன்னதாகவே இந்த சேல் தொடங்குவதால் விற்பனையில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிமிடெட் சேலாக இருப்பதால், ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையில் மட்டுமே ஆர்டர் செய்ய கிடைக்கும். அதற்கு மேல் ஓப்பன் சேலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications