வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.12,297 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme NARZO 80x 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 5ஜி சிப்செட் மற்றும் IP69 டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.13,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர்ப்ரூப் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) கொண்ட மாடலாக இந்த ரியல்மி போன் கிடைப்பதால், குவாலிட்டியானது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக இருக்கும். அதே நேரத்தில் ஸ்பீட்வேவ் பேட்டர்ன் டிசைனில் பிரீமியம் லுக்கையும் இது கொடுக்கிறது.

இதுபோக லாங்-லாஸ்டிங் பேட்டரி கிடைக்கிறது. 6000mAh பேட்டரியுடன் அதிக பேக்கப் கொடுக்கும் மாடலாக இருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.12,297 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது.
இந்த ரூ.12,297 விலையானது பேங்க் தள்ளுபடி அல்லது கூப்பன் தள்ளுபடி கிடையாது. நேரடியாக ரூ.13,999 பட்ஜெட்டில் இருந்து குறைக்கப்பட்ட விலையாகும். ஆகவே, இதே விலையில் நேரடியாக பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்ய முடியும். மொத்தமாக ரூ.1,702 விலை குறைப்பில் கிடைக்கிறது. இதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் தள்ளுபடியில் வருகிறது.
அதாவது, இந்த 8 ஜிபி ரேம் (10 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்டை பிளிப்கார்ட் தளத்தில் இப்போது ஆர்டர் செய்தால், ரூ.13,070 விலைக்கு வாங்கி கொள்ள முடிகிறது. இதன் மூலம் ரூ.1,929 விலை குறைப்பில் ஆர்டர் செய்ய முடிகிறது. ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் லாபம் கொடுக்கிறது.

ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80x 5G Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த சிப்செட்டில் பேக் செய்யப்படும், மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் கம்மி விலையில் அதிக கேபாசிட்டி கொடுக்கிறது. அதேபோல 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் அதற்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம்.
அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69 ரேட்டிங் கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போனில் டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) ஆகிய கலர்கள் ஸ்பீடு வேவ் பேட்டர்ன் டிசைனில் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








