பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme NARZO 80x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஏச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme NARZO 80x 5G) ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80x 5G Specifications): 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (6nm Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரியல்மி போனில் உள்ளது.
6.72 இன்ச் புல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் இதன் டிஸ்பிளேவில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2400 x 1080 பிக்சல்கள், 240Hz டச் சாம்பிளிங ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதுவும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 50 எம்பி மெயின் கேமரா +2 எம்பி போர்ட்ராய்டு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Shock Resistance) மற்றும் IP69 ரேட்டிங் டாப்-டயல் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர MIL-STD 810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி போன்.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும் டீப் ஓசன் (Deep Ocean) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








