பொளக்குது விற்பனை.. ரூ.17,999 பட்ஜெட்ல அண்டர் வாட்டர் கேமரா.. 6000mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
அண்டர் வாட்டர் போட்டோகிராபி மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 7400 சிப்செட், 6000mAh டைட்டன் பேட்டரி, 80W அல்ட்ரா சார்ஜிங், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சைக்ளோன் விசி கூலிங் சிஸ்டம் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. அமேசான் தளத்தில் கூப்பன் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன கிடைக்கிறது?
ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அமேசான் விற்பனை (Realme Narzo 80 Pro 5G Amazon Sale): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. 8 ரேம் ஜிபி + 256 மெமரி ஜிபி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,499ஆகவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.23,499ஆகவும் இருக்கிறது.

இந்த மூன்று வேரியண்ட்களுக்கும் ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.17,999 பட்ஜெட்டிலும், 8 ரேம் ஜிபி + 256 மெமரி ஜிபி வேரியண்ட்டை ரூ.19,499 பட்ஜெட்டிலும் வாங்கலாம். அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.21,499 விலையிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இதுபோக 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த வேரியண்ட்களுக்கு கிடைக்கிறது. 7.55 எம்எம் தடிமன் & 179 கிராம் எடையில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கிடைக்கிறது. ஸ்பீடு சில்வர் (Speed Silver) அல்லது ரேசிங் கிரீன் (Racing Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80 Pro 5G Specifications): அண்டர் வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கொண்ட IP69 ரேட்டிங் டாப்-டயர் வாட்டர்ப்ரூஃப் கிடைக்கிறது. ஆகவே, 2 மீட்டர்கள் ஆழம் + 48 மணி நேரங்களுக்கு தாக்குப் பிடிக்கும். ஆனால், ப்ரஷ் வாட்டரில் இருக்க வேண்டும். கடல் நிரீல் இவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்காது.
4K வீடியோ ரெக்கார்டிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 22 எம்எம் போகல் லென்த் கொண்ட மோனோகுரோம் கேமரா செகண்டரியாக கிடைக்கிறது. ஏஐ கேமரா மோட்கள் (AI Camera Modes) கிடைக்கின்றன.
இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் மற்றும் 14 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. 6000mAh டைட்டன் பேட்டரி மற்றும் 80W அல்ட்ரா சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி இருக்கிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, 3டி கர்வ்ட் டிசைனில் 6.7 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைப்பதால், அவுட்டோர் அவுட்புட் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்காக 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








