SALE பிச்சிக்கப் போகுது.. வெறும் ரூ.17,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களையும் இந்த போன் கொடுக்கிறது. அமேசான் தளத்தில் எர்லி பேர்ட் சேல் இன்று தொடங்குகிறது. இந்த ரியல்மி போனின் பீச்சர்கள், விலை, டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80 Pro 5G Specfications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மோனோகுரோம் கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode) உள்ளது.
மேலும், நைட் மோட் (Night Mode), ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மெண்ட் (AI Image Enhancement), ஏஐ எரைஸ் 2.0 (AI Erase 2.0), மோஷன் டீபிளர் (Motion Deblur), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ஸ்மார்ட் லூப் 2.0 (AI Smart Loop 2.0), ஏஐ ரைட்டர் (AI Writer), ஏஐ ரீப்ளை (AI Reply) பீச்சர்கள் உள்ளன.
இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனில் 6.7 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 90FPS பிஜிஎம்ஐ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்ட மாடல்கள் கிடைக்கின்றன. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
14 ஜிபி டைனாமிக் ரேம் கிடைக்கிறது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சைக்லோன் விசி கூலிங் சிஸ்டம் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்பீடு சில்வர் (Speed Silver) கலர் உள்ளது.
அதேபோல ரேசிங் கிரீன் (Racing Green) கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ரேம் ஜிபி + 256 மெமரி ஜிபி மாடலின் விலை ரூ.21,499ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப் மாடலின் விலை ரூ.23,499ஆகவும் இருக்கிறது.
இந்த விலையில் ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையில் எர்லி பேர்ட் விற்பனை தொடங்குகிறது. இந்த விற்பனையில் டிஸ்கவுண்ட் போக ஆர்டர செய்யலாம். லிமிடெட் பிரீயர் சேல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications