Home
Mobile

ஏப்.9 குறிச்சாச்சு.. ரூ.20,000 பட்ஜெட்ல SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கும் ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) போனின் எர்லி பேர்ட் சேல் (Early Bird Sale) மற்றும் லிமிடெட் ப்ரீயட் சேல் (Limited Period Sale) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 9ஆம் தேதி இந்த ரியல்மி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால், டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற முக்கிய பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நேரத்தில் எர்லி பேர்ட் சேல் மற்றும் லிமிடெட் ப்ரீயட் சேல் உறுதியாகி இருக்கிறது.

ஏப்.9 குறிச்சாச்சு.. ரூ.20,000 பட்ஜெட்ல SONY கேமரா.. 6000mAh பேட்டரி!

ஆகவே, ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனின் எர்லி பேர்ட் சேலானது, ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்க இருக்கிறது. அமேசான் மற்றும் ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல லிமிடெட் பிரீயட் சேலானது ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்கிறது. இதே நாளிலும் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஓப்பன் சேல் குறித்த விவரங்கள் ஏப்ரல் 9ஆம் தேதியன்று ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி இந்திய மார்கெட்டில் வெளியான பிறகு தெரியவரும். இப்போது, இந்த மாடலின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இவை ரியல்மி நிறுவனம் உறுதி செய்த பீச்சர்களாகும். அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டையும் ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதையும் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80 Pro 5G Specfications): இந்த ரியல்மி போனில் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் கிடைக்கிறது.

90எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் மற்றும் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. 6,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த பெரிய பேட்டரியை கொடுத்தும் வெறும் ரூ.7.55 எம்எம் தடிமன் மற்றும் 179 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனில் 3840Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

பிரீமியம் போன்களில் கிடைக்கும் IP69 ரேட்டிங் வாட்டர் ப்ரூப் உள்ளது. இந்த வாட்டர் ப்ரூப் மூலம் 2 மீட்டர்கள் ஆழம் வரையில் இந்த போன் தாக்குப் பிடிக்கும். சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனானது ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த விலையை ரியல்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட மாடல்களை எதிர்பார்க்கலாம். ஸ்லிம் போன் பிரியர்களுக்கு இது பக்காவான மாடலாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Pro 5G With 50MP Camera Early Bird And Limited Period Sale Date Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X