Home
Mobile

ஏப்.9 அறிமுகமாகும் 2 புதிய Realme போன்கள்.. வந்ததுமே ஆபர் விலையில் விற்பனை.. என்ன மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அவைகள் - ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) மற்றும் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) மாடல்கள் ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ரியல்மி நிறுவனம் அதன் புதிய நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப கால விற்பனை சலுகைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கால விற்பனை சலுகைகள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இதன்கீழ் ரியல்மி நிறுவனம் மாணவர்களுக்கான பிரத்யேக சலுகைகள், வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.

2 புதிய Realme போன்கள்.. வந்ததுமே ஆபர் விலையில் விற்பனை!

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கான ஆரம்ப விற்பனை ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அமேசான் (Amazon) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) வலைத்தளத்தில் நடைபெறும். மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப கால விற்பனை ஆனது ஏப்ரல் 11 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும்.

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும்; அதே நேரத்தில் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகளை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,299 மதிப்புள்ள மாணவர்களுக்கான பிரத்யேக சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாளத்தை சரிபார்த்து, ஆரம்ப கால விற்பனையின் போது கூடுதல் செலவு இல்லாமல் ஒரு வருட காலத்திற்கான ஸ்க்ரீன் டேமேஜ் ப்ரொடெக்ஷன்-ஐ பெறலாம். இந்த சலுகைக்கான கொள்முதல் காலம் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 18 வரை இருக்கும். மேலும் மாணவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் தங்கள் சரிபார்ப்பு மற்றும் சலுகை பதிவை முடிக்க வேண்டும்.

வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, சலுகைக்கான தகுதி சான்றிதழ் கூப்பன் மாணவர்களின் ரியல்ம அக்கவுண்டில் சேர்க்கப்படும், அதனை தொடர்ந்து மே 8 ஆம் தேதி ஒரு வருட காலத்திற்கான ஸ்க்ரீன் டேமேஜ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படும். ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் கொண்டு இயங்குகிறது, அதே நேரத்தில் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் மூலம் இயங்குகிறது. இரண்டுமே 6000mAh பேட்டரியை கொண்டுள்ளன மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி69 சான்றிதழை கொண்டுள்ளன.

முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை ப்ரோ மாடல் 80W சார்ஜிங்கை ஆதரிக்கும், அதே நேரத்தில் நார்சோ 80எக்ஸ் 5ஜி மாடல் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும். மேலும்

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது BGMI-க்கு 90fps-ஐ ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது. இது 6,050மிமீ சதுர விசி கூலிங் சிஸ்டம் மற்றும் 7.55மிமீ தடிமன் கொண்ட டிசைனை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது இராணுவ தர ஷாக் ப்ரூப் கட்டமைப்பை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Pro 5G Narzo 80x 5G Early Bird Sale Dates Offers Announced Ahead Launch on April 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X