ரியல்மி வேற மாறி.. நார்சோ 70 ப்ரோவை தூக்கி சாப்பிட வருது நார்சோ 80 ப்ரோ.. எம்டி 7400 சிப்செட்.. எப்போது வருது?
கேமிங் பிரியர்கள் விரும்படியான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஓசி சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டுடன் ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (realme NARZO 80 Pro 5G) போனானது இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்ப்பட்டிருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனின் பட்ஜெட் எப்படி? என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் ரூ.20000 பட்ஜெட் செக்மெண்ட்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஓசி (MediaTek Dimensity 7400 SoC) சிப்செட் கொண்ட முதல் மாடலாக இந்த நார்சோ போன் இருக்கப்போவதாக ரியல்மி இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவதையும் உறுதி செய்துள்ளது. 788K அன்டுடு ஸ்கோர் கொண்டிருப்பதால், கேமிங் பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓரிரு வாரத்தில் இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி வெளியாக இருக்கிறது. அடுத்த சில நாட்களில் அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. மேற்கண்ட விவரங்களை தவிர மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மார்கெட்டில் சில பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளாலாம்.
ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Pro 5G Specifications): இந்த நார்சோவில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஓசி மட்டுமல்லாமல், மாலி ஜி615 எம்பி 2 ஜிபியு (Mali G615 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டும் இருக்கிறது.
ரேசிங் கிரீன் (Racing Green), ஸ்பீடு சில்வர் (Speed Silver) மற்றும் நைட்ரோ ஆரஞ்ச் (Nitro Orange) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைப்பது உறுதி என்றே சொல்லலாம். அதோடு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட பீச்சர்களில் சிப்செட் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் தவிர மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமேயாகும்.
இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போனுக்கு முன்னதாக பட்ஜெட்டில் வெளியாக மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme NARZO 70 Pro 5G) போனை பற்றி இப்போது தெரிந்த கொள்ள வேண்டி இருக்கிறது. இதன் பீச்சர்களில் இருந்து அப்கிரேட் பீச்சர்களே 80 ப்ரோ 5ஜி போனில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அதை தெரிந்து கொள்வோம்.
இந்த நார்சோ 70 ப்ரோ போனில் ரெயின் வாட்டர் டச் கன்ட்ரோல் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வந்தது, ஆனால், நார்சோ 80 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ஆகவே, நர்சோ 80 ப்ரோவிலும் டிரிபிள் ரியர் செட்டப் கிடைக்க வாய்ப்புள்ளது. 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, இதைவிட அதிக பேட்டரி எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இந்த போன் கேமிங் மாடலாக வெளியாக இருக்கிறது.
Image: Realme NARZO 70 Pro 5G


Click it and Unblock the Notifications








