SALE முரட்டு SALE.. ரூ.7000 க்கு 6300mAh பேட்டரி, மிலிட்டரி கிரேடு பாடி.. அடிமட்ட பட்ஜெட்ல Realme போன்!
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த கம்மியான விலைக்கு 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுப்பதால், விற்பனையிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி போனின் விவரங்களை பார்ப்போம்.
பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆனது 17 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.7,340 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், ரூ.372 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக ரூ.7,058 விலைக்கு ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த மலிவு விலையில் 6300mAh பேட்டரியுடன் பிரீமியம் டிசைன் வருவதால், விற்பனை சூடு பிடித்துள்ளது.

ரியல்மி நார்சோ 80 லைட் அம்சங்கள் (Realme NARZO 80 Lite Specifications): ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் கொண்டுள்ள இந்த ரியல்மி நார்சோ 80 லைட் போனுக்கு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்து, லேட்டஸ்ட் பீச்சர்களை பேக் செய்துள்ளது.
மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொண்டுள்ளது. ஆகவே, ஏஐ பூஸ்ட், ஏஐ எரைசர், ஏஐ கிளியர் பேஸ் மற்றும் ஏஐ இமேஜ் மேட்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் செட்டப் வந்துள்ளது. செல்பீகளுக்கு 5 எம்பி ஷூட்டர் கிடைக்கிறது.
இந்த மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சார் கிடைக்கிறது. இந்த கேமராவில் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ரியர் கேமராவுக்கு பல்ஸ் லைட் (Pulse Light) கிடைக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனுக்கு IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கிடைப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802.11 (Wi-Fi 802.11) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொண்டுள்ளது. 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ரியல்மியில் ஆர்மர்ஷெல் புரொடெக்சன் பாதுகாப்பு கிடைக்கிறது.
மேலும், 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 180Hz டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் உள்ளது. வாட்டர் டிராப்களின் போதும், டச் ரென்ஸ்பான்சிவ் பக்காவாக இருக்கும். எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டிசைனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) கலரில் வாங்க கிடைக்கிறது. மேலும், பீச் கோல்டு (Beach Gold) கலரிலும் ஆப்ஷன் கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom ported Speaker) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








