Home
Mobile

ஜூலை.31-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.6,599-க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனை அடித்து பிடித்து ஆர்டர் செய்வார்கள் என்று சொல்லும்படியான பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 80 லைட் (Realme NARZO 80 Lite) போன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓம்னிவிஷன் சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் நாளை (ஜூலை 31) இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,299ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.8,299ஆக இருக்கிறது. இந்த மாடல்களுக்கு ரூ.700 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,599 விலையில் வாங்கி கொள்ளலாம்.

ஜூலை.31-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.6,599-க்கு 6300mAh பேட்டரி!

அதேபோல 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.7,599 விலைக்கு வாங்கி கொள்ளலாம். அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்க இருந்தாலும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்டு (Beach Gold) ஆகிய கலர்களை கொடுக்கிறது. டியூரபிலிட்டியை பார்க்கையில், ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military-grade Shock Resistance) வருகிறது. மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. ஆகவே, பேட்டரி மட்டுமல்லாமல், டியூரபிலிட்டி பீச்சர்களும் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் போனில் ஹை-லைட்டாக இருக்கிறது. மற்ற பீச்சர்கள் எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 80 லைட் அம்சங்கள் (Realme NARZO 80 Lite Specifications): இந்த போனில் 6300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. ஆகவே, சிங்கிள் சார்ஜில் 2 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ள முடியும். இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதே வரவேற்க வேண்டியதாகும். இதில் கூடுதலாக 6W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கிடைக்கிறது.

டைப்-சி போர்ட் மூலம் ரிவர்ஸ் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். இயர்பட்கள் மற்றும் நெக்பேண்ட்களுக்கு உடனடியாக இதில் இருந்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது. அதேபோல 201 கிராம் எடை கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், பல்ஸ் லைட் (Pulse Light) கிடைக்கிறது.

இது கிட்டத்தட்ட ஆரா எல்இடி போலவே இருக்கிறது. ஆனால், 9 கலர் ஆப்ஷன் மற்றும் 5 குளோயிங் மோட்களை இந்த பல்ஸ் லைட் கொடுக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாருடன் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 80 லைட் போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite With 4GB RAM First Sale Starts Tomorrow Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X