Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.10,998 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite 4G) இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே மார்கெட்டில் விற்பனைக்கு வந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) போனுக்கு கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இப்போது, ஆர்டர் செய்தால், கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6W ரிவர்ஸ் சார்ஜிங், 13 எம்பி கேமரா, ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி வெளியாகி இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,299ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.700 டிஸ்கவுண்ட் போக ரூ.6,599 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.10,998 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

இந்த விலைக்கு பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பக்காவாக இருந்தாலும், அடிமட்ட பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் யுனிசோக் டி7250 சிப்செட் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் அந்த விலைக்கு ஏற்ப மட்டுமே இருக்கிறது. ஆனால், இதற்கு முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அப்படி கிடையாது, சிப்செட்டிலும் பட்டையை கிளப்புகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கிறது. இது பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மாடலாகும். அதுமட்டுமல்லாமல், இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 4ஜி வேரியண்ட்டிலும் அதே ஓஎஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் யுஐ 2 மாடல்களிலும் கிடைக்கும்.

ஆகவே, எப்படி பார்த்தாலும் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி பட்ஜெட்டிலும் பக்காவாக இருக்கிறது. இப்போது, இதன் பிளாக் கலர் வேரியண்ட்டுக்கு ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,498ஆக இருக்கிறது. இதில் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் வருகிறது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.10,998 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

இதை அமேசான் தளத்தில் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.10,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.10,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் மட்டும் போதுமா, மற்ற பீச்சர்களையும் சொல்லுங்கள் என்பது கேட்பது புரிகிறது. இதோ பின்வருமாறு.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ரியல்மி யுஐ 3.0 (realme UI 3.0) கிடைக்கிறது. 2 டிபிக்கான எஸ்டிகார்டு சிலாட் கிடைக்கிறது.

32 எம்பி மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் சென்சார் கிடைக்கிறது. செகண்டரி லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த ரியல்மி 5ஜி மாடலிலும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. பாட்டம் ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite 5G With Onyx Black Colour Available At Discounted Price Check Amazon Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X