Home
Mobile

பொளந்து கட்டுது ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 32MP கேமரா.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியம் போன்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், கேலக்ஸிகோர் சென்சார் கேமரா, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 2 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) போன் கிடைக்கிறது. ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக மேலும் மலிவாக கிடைக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலின் விலை மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Amazon Sale): இந்த நார்சோ போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது.

பொளந்து கட்டுது ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

இந்த விலையில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,999 ஆரம்ப விலைக்கு இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். இந்த அடிமட்ட பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள எதிர்பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்றபடியான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது.

128 ஜிபி மெமரி மட்டுமல்லாம், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் மற்றும் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

பொளந்து கட்டுது ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போனில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GALAXYCORE GC32E2) சென்சாருடன் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர், ஏஐ கிளியர் ஃபேஸ் (AI Clear Face) கிடைக்கிறது. மற்ற ஏஐ பீச்சர்களை பார்க்கையில், கூகுள் ஜெமினி, ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smartloop) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, இந்த நார்சோ 80 லைட் 5ஜி மாடலானது பக்கா டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) மற்றும் கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ போன்ற வழக்கமான பட்ஜெட் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல 7.94 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite 5G With 6GB RAM Available For Purchase on Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X