Home
Mobile

ஜூன் 20 முதல் ஆர்டர் தெறிக்கும்.. ரூ.9,999 க்கு 5G, 6000mAh பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், மிலிட்டரி கிரேட்!

ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) மாடல் இன்று (ஜூன் 16) இந்தியாவில் அறிமுமானது. ஜூன் 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 முதல் ஆர்டர் தெறிக்கும்.. ரூ.9,999 க்கு புது Realme போன்!

32 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் (Military-grade durability certification) கொண்டுள்ளது. சுவாரசியமாக இது பட்ஜெட் விலை மாடல் ஆக இருந்தாலும் கூட 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 80எக்ஸ் (Realme Narzo 80x) மற்றும் ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro) ஆகிய மாடல்களுடன் இணைகிறது. அதாவது ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடல் ஆனது ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை சீரிஸ் ஆன நார்சோ 80 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும்.

ஜூன் 20 முதல் ஆர்டர் தெறிக்கும்.. ரூ.9,999 க்கு புது Realme போன்!

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) உடன் வருகிறது மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது ஒரு செவ்வக வடிவிலான ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32-மெகாபிக்சல் GC32E2 ப்ரைமரி சென்சார் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஒரு டேப்லெட் வடிவ எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் உள்ளது. இதன் கேமரா ஆப்பில் ஏஐ-பேக் இமேஜிங் மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) போன்ற எடிட்டிங் அம்சங்களும் உள்ளன.

பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 15W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் 5ஜி சிம் இணைப்பை ஆதரிக்கிறது.

மேலும் இது தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும், இராணுவ தர MIL-STD-810H அதிர்ச்சி எதிர்ப்பு சான்றிதழையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 7.94 மிமீ தடிமனும் மற்றும் 197 கிராம் எடையும் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவைகளின் அசல் விலை முறையே ரூ.10,499 மற்றும் ரூ.11,499 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 20 முதல் ஆர்டர் தெறிக்கும்.. ரூ.9,999 க்கு புது Realme போன்!

இருப்பினும் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் முறையே ரூ.500 மற்றும் ரூ.700 தள்ளுபடியை பெறலாம். இதன்கீழ் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.9,999 க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.10,799 க்கும் வாங்க முடியும்.

இது கிரிஸ்டல் பர்பிள் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் ஜூன் 23 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Lite 5G with 6000mAh Battery Launched in India Sale Starting June 20 Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X