தூக்கு.. தூக்கு.. விட்றாத.. வெறும் ரூ.8,898-க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமலேயே மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அமேசான் விலை (Realme NARZO 80 Lite 5G Amazon Price): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ..10,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசானில் 4 ஜிபி ரேம் மாடலானது ரூ.9,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

அதேபோல 6 ஜிபி ரேம் மாடலானது ரூ.10,498 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது விலை குறைப்பு சலுகையாகும். இதுபோக ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலை ரூ.8,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளாலம். மேலும், பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது.
ஆகவே, அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.269 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.9,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்கள், பிரீமியம் லுக்கில் கிடைக்கின்றன.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): இந்த நார்சோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இதில் ரியல்மி யுஐ 3.0 (realme UI 3.0) மற்றும் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஐ-கம்போர்ட் மோட், பெட்-டைம் மோட் மற்றும் டிசி டிம்மிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த டிஸ்பிளவுக்கு புரொடெக்சன் இல்லை. ஆனால், மொத்தமாக MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இதுபோக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி இருக்கிறது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் வெறும் 7.94 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஸ்லிம் டிசைனில் ஸ்மார்ட்போன் விரும்பும் பிரியர்களுக்கு இது பக்காவாக இருக்கும். கேலக்ஸிகோர் சென்சாருடன் 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு-மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








