அதிர போகுது ஆர்டர்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) மாடல் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் டைமன்சிட்டி சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 1604 x 720 பிக்சல்கள், 240 Hz டச் சாம்பிளிங் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.
அதுவும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர டஃப் கார்னர் புரொடெக்சன் மற்றும் ஏர்பேக் புரொடெக்சன் ஆகியவற்றுடன் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த ரியல்மி போனின் பின்புறம் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் கேலக்ஸிகோர் ஜிசி32இ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கொண்ட 32 எம்பி மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அல்ட்ரா லினியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom Ported Speaker), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.
மேலும் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளன. கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications