Home
Mobile

அடிச்சு தூக்குது விற்பனை.. ரூ.9,999 ஆஃபர் விலைக்கு Realme 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மலிவு விலை 5ஜி மாடல்களை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதில் அடிமட்ட விலைக்கு ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 21 சதவீத தள்ளுபடி போக ரூ.10,999ஆக இருக்கிறது. மேலும், கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.9,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 21 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது விற்பனை.. ரூ.9,999 ஆஃபர் விலைக்கு Realme 5ஜி போன்!

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்து, ரியல்மி யுஐ 3.0 (realme UI 3.0) கொண்டிருக்கிறது.

6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.

இதில் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் வருகிறது. மேலும், 2 மீட்டர்களுக்கு டிராப் ரெசிஸ்டன்ஸ், டஃப் கார்னர் புரொடெக்சன் மற்றும் ஏர்பேக் புரொடெக்சன் ஆகியவற்றுடன் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ரெயின்போர்ஸ்டு அலுமினியம் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் கேலக்ஸிகோர் ஜிசி32இ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கொண்ட 32 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது. மேலும், செகண்டரி லென்ஸ் மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) இந்த போனுக்கு கிடைக்கிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. மேலும், அல்ட்ரா லினியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom Ported Speaker) கிடைத்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7.94 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது.

மேலும், 197 கிராம் எடை கொடுக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி உள்ளது. கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite 5G With 4GB RAM 6300mAh Battey Discount in India Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X