Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ரியல்மி போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80 Lite 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மார்க்கெட்டே அதிர போகுது.. வருகிறது புது Realme 5ஜி போன், எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனேவ இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி போன் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 விலையிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Lite 5G India prices, key specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X