பொளந்து கட்டிய ஆர்டர்.. ரூ.7,500 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 12GB ரேம்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனத்தின் நார்சோ 80 லைட் 4ஜி (NARZO 80 Lite 4G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் கொண்ட இந்த நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தள்ளுபடியில் வாங்கி கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,299ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.7,889 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக, ரூ.395 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,493 பட்ஜெட்டில் இந்த நார்சோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 4G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கொண்ட 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.
இதுபோக 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த், 4096 லெவர் பிரைட்ன்ஸ் அட்ஜெட்ஸ்மெண்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது.
இந்த விலைக்கு கிடைக்கும்படி ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் வருகிறது. அதேபோல மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல் 6W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த சார்ஜிங்குடன் 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது. இருப்பினும், 201 கிராம் எடை வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சார் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், பல்ஸ் லைட் (Pulse Light) மற்றும் நைட் மோட் (Night Mode) கிடைக்கிறது. இதுபோக போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. ஆகவே, டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை கிடைக்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கிடைக்கிறது. இந்த நார்சோ 80 லைட் ஆனது 4ஜி மாடலாக இருக்கிறது. ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது.
மேலும், வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்டு (Beach Gold) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








