Home
Mobile

Realme ருத்ர தாண்டவம்.. ரூ.6,599 க்கு 16GB ரேம், 6300mAh பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், AI.. எந்த மாடல்?

இந்தியாவில் ரியல்மி (Realme) நிறுவனம் அதன் நார்சோ சீரீஸின் கீழ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) ஸ்மார்ட்போன் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது கடந்த மாதம் அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ஆகும்.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி முக்கிய அம்சங்கள்:
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டாகோர் யுனிசாக் டி7250 சிப்செட்
- 16 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம்
- வயர்டு மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 6300mAh பேட்டரி

Realme ருத்ர தாண்டவம்.. ரூ.6,599 க்கு 16GB ரேம், 6300mAh பேட்டரி!

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி விலை: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி சலுகைகள்: அறிமுக சலுகையாக ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.700 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேற்கண்ட 2 ஆப்ஷன்களும் முறையே ரூ.6,599 மற்றும் ரூ.7,599 க்கு வாங்க கிடைக்கும்

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் அப்ஸிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்ட் (Beach Gold) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 28 அன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேல் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும். அதன் பின்னர் ஜூலை 31 அன்று மதியம் 12 மணி முதல் திறந்த விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் (Realme UI 6.0 OS) உடன் வருகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.74-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1,600 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடு உடனான ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி ஜி57 எம்பி1 ஜிபியு, 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இது OV13B10 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 15W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20.7 மணிநேரம் யூட்யூப் பிளேபேக்கையும் 19 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டையும் வழங்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை 4ஜி, ஐபி54 ரேட்டிங், இராணுவ-தர ஷாக் ரெசிஸ்டென்ட்டிற்கான ஆர்மர்ஷெல் ப்ரொடெக்ஷன் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ பூஸ்ட், ஏஐ கால் நாய்ஸ் ரிடெக்ஷன் 2.0 மற்றும் ஸ்மார்ட் டச் உள்ளிட்ட பல ஏஐ ஆதரவு அம்சங்களையும் சேர்த்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Lite 4G with 6300mAh Battery Launched in India Flash Sale on July 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X