Home
Mobile

ஒரே நேரத்தில் 3 Realme போன்கள் விலை சரிவு.. 4G வெறும் ரூ.6,799 க்கு.. 5G மாடல் மீது ரூ.6000 விலை குறைப்பு!

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ சீரீஸின் கீழ் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களாக ரியல்மி நார்சோ 90 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஆகிய 2 மாடல்கள் அறிமுகமான வேகத்தில் ரியல்மி நார்சோ 80 சீரிஸின் கீழ் உள்ள 3 மாடல்களின் விலைகளுமே ரூ.6000 வரை குறைந்துள்ளது.

1. ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G): ரியல்மி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எம்ஆர்பி விலை ஆன ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,799 என்கிற கூப்பன் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது (ரூ.2200 டிஸ்கவுண்ட்)

ஒரே நேரத்தில் 3 Realme போன்கள் விலை சரிவு.. 4G வெறும் ரூ.6,799 க்கு!

2. ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G): ரியல்மி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எம்ஆர்பி விலை ஆன ரூ.23,999 க்கு பதிலாக ரூ.17,999 என்கிற கூப்பன் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது (ரூ.6000 டிஸ்கவுண்ட்)

3. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G): ரியல்மி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எம்ஆர்பி விலை ஆன ரூ.15,999 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற கூப்பன் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது (ரூ.2000 டிஸ்கவுண்ட்)

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி நார்சோ 90 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.16,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான டாப்-எண்ட் ஆப்ஷன் ரூ.18,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற 2205 டிசம்பர் 24 ஆம் தேதி அன்று அமேசான் (Amazon) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 90 5ஜி மாடல் ஆனது விக்டரி கோல்ட் மற்றும் கார்பன் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களிலும், ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஆனது நைட்ரோ ப்ளூ மற்றும் ஃப்ளாஷ் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களிலும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 90 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்:
- இரண்டுமே டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வருகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 கொண்டு இயங்குகின்றன
- நார்சோ 90 மாடலில் 6.57-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே
- நார்சோ 90எக்ஸ் மாடலில் சற்று பெரிய 6.80-இன்ச் (720 x 1570 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே

- நார்சோ 90 மாடலில் Octacore 6nm MediaTek Dimensity 6400 Max சிப்செட்
- நார்சோ 90எக்ஸ் மாடலில் Octacore 6nm MediaTek Dimensity 6300 சிப்செட்
- நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (f/1.8) பிரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் சென்சார்

- நார்சோ 90எக்ஸ் மாடலிலும் டூயல் ரியர் கேமராஸ் செட்டப்
- 50-மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி கேமரா மற்றும் மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் சென்சார்
- நார்சோ 90 மாடலில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- நார்சோ 90எக்ஸ் மாடலில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- இரண்டுடிலுமே 30fps இல் 1080p ரெசல்யூஷன் கொண்ட வீடியோ ரெக்கார்ட் ஆதரவு உள்ளது
- இரண்டுமே 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh டைட்டன் பேட்டரிகளை கொண்டுள்ளது
- நார்சோ 90 மாடலில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்ஸ்
- நார்சோ 90எக்ஸ் மாடலில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Lite 4G Narzo 80 Pro 5G Narzo 80x 5G gets Biggest Discounts in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X