விட்ராதீங்க சார்.. வெறும் ரூ.11,999 ரேட்ல 6300mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
இவ்வளவு மலிவான விலைக்கு கிடைத்தால் வாங்காமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படியான பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி இருப்பதால், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது, அமேசான் விற்பனையில் 29 சதவீத தள்ளுபடி போக ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக தள்ளுபடியும் கிடைக்கிறது. இதையும் பெற்றலாம், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 4G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும். ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
மேலும், 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுத்துள்ளது. ஆர்மர்ஷெல் புரொடெக்சன் மட்டுமல்லாமல், எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) என்னும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி சர்டிபிகேஷனையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாருடன் 13 எம்பி மெயின் கேமராவை பேக் செய்துள்ளது. மேலும், பிரத்யேக பல்ஸ் லைட் (Pulse Light) கொடுத்துள்ளது. செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுத்துள்ளது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.
1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரி கொடுக்கிறது. 7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை கொண்டுள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்டு (Beach Gold) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications