Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.13,999 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. OV கேமரா.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடட் சேல் (Amazon Great Indian Festival Reloaded Sale) என்னும் சிறப்பு விற்பனையில் ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite 4G) ஸ்மார்ட் போன் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 6300mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி மாடலின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. இந்த விலையே 12 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,999 விலைக்கு வாங்கலாம்.

விஸ்வரூப விற்பனை.. ரூ.13,999 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. OV கேமரா!

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 4G Specifications): இந்த பட்ஜெட் விலையிலும் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சார் கொண்ட 13 எம்பி மெயின் கேமராவுடன் இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி போன் களமிறங்கியுள்ளது. அத்துடன், செகண்டரி கேமரா இணைந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் பிரத்யேகமான பல்ஸ் லைட் (Pulse Light) வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வீடியோ கால்கள் மற்றும் செல்பீ பிரியர்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி மாடல் கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் பாதுகாப்பிற்காக ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி சர்டிபிகேஷன் மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உடன் கூடிய ஆக்டா கோர் யுனிசோன் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. விலைக்கு ஏற்ற சிறந்த பர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் இதில் கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ஆகியவை இந்த போனில் உள்ளன.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்ட இந்த மாடல், 7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6300mAh மெகா பேட்டரியை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. இதற்காக டைப்-சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பீச் கோல்டு (Beach Gold) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Realme NARZO 80 Lite 4G Gets Discount on Amazon Great Indian Festival Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X