Home
Mobile

அடிச்சு தூக்கிய ஆர்டர்.. ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 6W ரிவர்ஸ் சார்ஜிங் realme போன்!

அமேசான் தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையில் அடித்து பிடித்து ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (realme NARZO 80 Lite 4G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட்டில் 6300mAh பேட்டரி, 15W சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 29 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.11,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், எந்த பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.11,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

அடிச்சு தூக்கிய ஆர்டர்.. ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி!

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 4G Specifications): இந்த பட்ஜெட் விலைக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் டி7250 1என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், லேட்டஸ் பீச்சர்களை கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது.

450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமே கொடுத்துள்ளது. இருப்பினும், 563 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட் செக்மெண்ட்டிலும் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாருடன் 13 எம்பி ரியர் கேமராவை பேக் செய்துள்ளது. இதில் எப்/2.2 அபெர்சர் கிடைக்கிறது. எல்இடி பிளாஷ் கிடைக்கிறது. மேலும், எஸ்சி520சிஎஸ் (SC520CS) சென்சாருடன் 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

எப்/2.2 அபெர்சர் கொடுக்கப்பட்டு உள்ளது. பேட்டரி பீச்சர்களே பட்டையை கிளப்பும்படி பேக் செய்யப்பட்டு உள்ளது. ஏனென்றால், இந்த விலைகக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனால், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6300mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு ஏற்ப 7.94 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 201 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் பீச் கோல்டு (Beach Gold) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
realme NARZO 80 Lite 4G Available At 29 Percent Discount in Amazon Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X