Home
Mobile

புது வேரியண்ட்.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme NARZO 70x 5G) போனின் புதிய வேரியண்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது முன்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் தான் விற்பனைக்கு வந்தது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். ஆனால் தற்போது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போனை ரூ.14,999 விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.11,999 விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ரியல்மி ஸ்டோர் மற்றும் அமேசான் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.

புது வேரியண்ட்.. 8ஜிபி ரேம்.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70x 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் LCD டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+ SoC) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன்.

புது வேரியண்ட்.. 8ஜிபி ரேம்.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

புது வேரியண்ட்.. 8ஜிபி ரேம்.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

குறிப்பாக இந்த போனில் 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

5000எம்ஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். மேலும் 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மிஸ்டி ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ மவுண்டன் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 70x 5G 8GB RAM Variant launched check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X