Home
Mobile

வெளுக்குது ஆர்டர்.. ரூ.14999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களுக்கான டிசைன் மட்டுமல்லாமல் 14 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேபர் கூலிங் சிஸ்டம் பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு ரியல்மி நார்சோ 70 டர்போ (Realme NARZO 70 Turbo) போன் விற்பனைக்கு வந்துள்ளது. அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரள விடுகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ போனின் டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 70 டர்போ அம்சங்கள் (Realme NARZO 70 Turbo Specifications): இந்த ரியல்மி போனில் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

வெளுக்குது ஆர்டர்! ரூ.14999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம் போன்!

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 6 ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ரியல்மி டர்போ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ரியல்மி யுஐ 5 (realme UI 5) வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான பக்கா அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதுபோக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேபர் கூலிங் சிஸ்டம் (Stainless Steel Vapor Cooling System) உள்ளது.

அதேபோல லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்க 12 ஜிபி ரேம் மாடலில் 14 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

வெளுக்குது ஆர்டர்! ரூ.14999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம் போன்!

மேலும், 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் 1080P வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 டர்போவில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.

டர்போ எல்லோ (Turbo Yellow), டர்போ கிரீன் (Turbo Green) மற்றும் டர்போ பர்பிள் (Turbo Purple) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999 ஆகவும் இருக்கிறது.

இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், ரூ.16000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ போனை ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் போனுக்கு இது நல்ல ஆப்ஷன்.

Best Mobiles in India

English summary
Realme NARZO 70 Turbo 5G With 50MP Camera Sale Under Rs 15000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X