எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 256GB மெமரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme NARZO 70 Turbo 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான கேமிங் அம்சங்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனின் விலை மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70 Turbo 5G Specifications): கேமிங் வசதிக்கு தகுந்தபடி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் (Stainless Steel Vapor Cooling System) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 14ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வசதியை வழங்குகிறது இந்த புதிய போன். அதேபோல் BGMI, Free Fire, MLBB மற்றும் COD உடன் GT மோட் வழங்குகிறது இந்த போன்.

இதுதவிர 90 fps கேமிங் ஆதரவும் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போன். அதேபோல் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த புதிய ரியல்மி போனை நம்பி வாங்கலாம்.
6.67-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 ×1080, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection), ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் போன்ற அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் உடன் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் realme UI 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும்
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த புது ரியல்மி போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், கலிலியோ (Galileo), க்ளோனாஸ் (GLONASS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் 185 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன். டர்போ எல்லோவ் (Turbo Yellow), டர்போ கிரீன் (Turbo Green), டர்போ பர்ப்பிள் (Turbo Purple) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.20,999 விலையிலும் விற்பனை செய்யப்படும். மேலும் இந்த போனுக்கு ரூ.2000 கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரூ.14,999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும். செப்டம்பர் 16-ம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ரியல்மி.காம் போன்ற தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








