Home
Mobile

Realme கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ.. ரூ.14,000 பட்ஜெட்டில் வாய் பிளக்க வைக்கும் அம்சங்கள்!

Realme Narzo 70 Turbo 5G Price: அடடே ரியல்மி நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று ஆச்சரியப்படும் வகையில், ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ரெடியாகி உள்ளது. நீங்கள் பட்ஜெட்-விலையில் ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருந்தாலும் சரி அல்லது 5ஜி ஆதரவுடன் வரும் ஒரு ஸ்டைல் ஆன ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருந்தாலும் சரி.. இது உங்களுக்கான ஒரு பெஸ்ட் சாய்ஸாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி எப்போது அறிமுகமாகும்? நேற்று வரையிலாக லீக்ஸ் தகவல்களில் மட்டுமே சிக்கி வந்த இந்த ஸ்மார்ட்போன் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Realme கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ!

ரியல்மியின் புதிய டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இதற்கு முன் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 70 சீரிஸ் மாடல்களுடன் இணையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் இந்த சீரீஸின் கீழ் நார்சோ 70 5ஜி (Narzo 70 5G), நார்சோ 70 ப்ரோ 5ஜி (Narzo 70 Pro 5G) மற்றும் நார்சோ 70எக்ஸ் 5ஜி (Narzo 70x 5G) என 3 மாடல்கள் உள்ளன.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ரியல்மி நிறுவனம் பகிர்ந்துள்ள சில போஸ்டர்களின்படி, ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மோட்டார்ஸ்போர்ட் ஆல் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புடன் வெளியிடப்படும். புகைப்படத்தில் உள்ளபடி, இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது இருபுறங்களிலும் கருப்பு நிறத்திலும், நடுவே மஞ்சள் நிறத்திலான செங்குத்தான பட்டையுடனும் வரும்.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஆனது ஒரு ஸ்கிர்க்கிள் கேமரா யூனிட்டை பேக் செய்யும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று கேமராக்கள் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் யூனிட் காணப்படுகிறது. இந்த கேமரா செட்டப்பில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை இடம்பெறலாம். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.
கொண்டு செல்லலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மேல் விளிம்பில் ஸ்பீக்கர் கிரில் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கையும் பார்க்க முடிகிறது ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7.6 மிமீ தடிமன் மற்றும் "டர்போ டெக்னாலஜி" அம்சத்தைக் கொண்டிருக்கும். டர்போ டெக்னாலஜி அம்சமானது கேமிங் தொடர்பான ஒரு அம்சமாக இருக்கலாம். இது பயனர்களுக்கு தடையற்ற செயல்திறனுடன், நல்ல கேமிங் அனுபவத்தை வழங்குமீ என்று கூறப்படுகிறது.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 4 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 6ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ரேம். மஞ்சள் கலர் ஆப்ஷனை தவிர்த்து இது பச்சை, ஊதா கலர்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இந்தியாவில் இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 70 Turbo 5G India Launch Confirmed Design Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X