முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.3000 கட்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜ்.. எந்த மாடல்?
டூயோ டச் கிளாஸ் பேனல் டிசைன், சோனி சென்சார் கேமரா, 16 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச், ஏர் கெஸ்ச்சர், 67W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme NARZO 70 Pro 5G) போனுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி 12 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். இதனால் ஆர்டர் அறக்க பறக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி விலை (Realme NARZO 70 Pro 5G Price): இந்த நார்சோ மாடல் அறிமுகமான போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் லிமிடெட் டைம் சலுகையில் விற்பனையாகிறது.

ஆகவே, 128 ஜிபி மாடலுக்கு ரூ.3000 சலுகையும், 256 ஜிபி மாடலுக்கு ரூ.2000 சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைக்கு எந்தவொரு பேங்க் கார்டுகளும் பயன்படுத்த வேண்டியது கிடையாது. ஆனால், ஜூன் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். இந்த பட்ஜெட்டில் இந்த போனில் என்ன இருக்கிறது?
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70 Pro 5G Specifications): கேமரா பிரியர்களுக்கான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது.
மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் வருவதால், அவுட்புட் பிரீமியமாக இருக்கும். நைட் மோட், போட்டோ மோட், ஸ்ட்ரீட் மோட், போர்ட்ராய்டு மோட், சூப்பர் குரூப் மோட் போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் மற்றும் மூவி வீடியோ, டூயல்-வியூ போன்ற வீடியோகிராபி பீச்சர்கள் வருகிறது.

இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போனில் 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோவில் சூப்பர் லீனியர் டூயல் ஸ்பீக்கர்கள் (Super Linear Dual Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டூயல்-மைக் நாய்ஸ் கேன்சலேஷன் (Dual-mic Noise Cancellation) சப்போர்ட் வருகிறது.
8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஏர் கெஸ்ச்சர் சப்போர்ட் (Air Gesture Support) உள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போனில் 67W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. டூயோ டச் கிளாஸ் பேக் பேனலுடன் கிளாஸ் கிரீன் (Glass Green) மற்றும் கிளாஸ் கோல்டு (Glass Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








