Home
Mobile

தூள் கிளப்பும் ரியல்மி.. Sony கேமரா.. 67W சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (realme narzo 70 Pro 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் போன்ற பல அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தூள் கிளப்பும் ரியல்மி.. Sony கேமரா.. பட்ஜெட் விலையில் 5ஜி போன்..

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) வசதியைக் கொண்டு இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

தூள் கிளப்பும் ரியல்மி.. Sony கேமரா.. பட்ஜெட் விலையில் 5ஜி போன்..

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது அறிமுகம்? வரும் மார்ச் 19-ம் தேதி இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பு இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme narzo 70 Pro 5G will be launched in India on March 19: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X