திடீர் விலை குறைப்பை பெற்ற Realme 5ஜி போன்.. 16GB ரேம், 50MP OIS கேமரா, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி!
ரியல்மி (Relame) நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆன நார்சோ சீரிஸின் கீழ் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G ) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கிடையில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் (Amazon), ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போன் மீது 28% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. தற்போது ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை, அதன் அசல் அறிமுக விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் 16ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது
மேலும் இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவை அம்சங்களையும் கொண்டுள்ளது.
புதிய ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட உள்ள நிலையில் பழைய ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி மாடலை நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கு 3 முக்கியமான காரணங்களை முன்வைத்து, ஏன் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும்.
முதல் காரணம் - இது டூயல் டோன் பினிஷ் உடன் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டுள்ளது. டிசைனை இன்னும் மேம்படுத்தும் வண்ணம், இது கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் கோல்டு என்கிற 2 கலர் ஆப்ஷன்களில், பளபளப்பான பாலிகார்பனேட் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் பாலிஷ் உடனான ஸ்டீல் பினிஷை கொண்டுள்ளது.
இரண்டாவது காரணம் - தரமான லோ லைட்டிங் போட்டோகிராஃபி: இந்த ஸ்மார்ட்போனின் மெயின் ரியர் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது. இந்த சென்சார் ரூ.20,000 க்குள் என்கிற பிரிவில் ஒரு கேம் சேஞ்சிங் அம்சமாகும். இந்த சென்சார், மங்கலான வெளிச்சத்தில் கூட "முடிந்த அளவிலான" தெளிவான மற்றும் விரிவான புகைப்படங்களை எடுக்கிறது.
மூன்றாவது காரணம் - ஏர் கெஸ்சர்ஸ்: இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு இதையொரு முக்கியமான காரணம் என்றும் கூறலாம். இதில் உள்ள ஏர் கெஸ்சர்ஸ் அம்சங்கள் ஆனது "சாதாரண ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு" அப்பால் உங்களை கொண்டு செல்லும். இன்னும் சோதனை நிலையில் உள்ள இந்த புதிய அம்சம், ஸ்க்ரீனை தொடாமலேயே, கை சைகைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்? ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் கொண்டு இயங்கும். இது 80W சார்ஜிங் உடனான 6000mAh பேட்டரியை பேக் செய்யும் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங் உடன் வரும். ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறத. இதனுடன் சேர்ந்து வரும் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








